இலங்கையில் பாதுகாக்கப்பட்ட தேசிய வனப்புக்களில் ஒன்றான் சிங்கராஜ வனத்தை ஒவ்வொரு வருடமும் ஏறாலமான சுற்றுலா பயணிகள் சென்று பார்த்த வண்ணம் தான் உள்ளனர். சிங்கராஜ வனம் செல்லும் வழியே சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் கொளன்ன பிரதேசத்திற்குட்பட்ட அரச மாளிகை தான் மடுவன்வெல வலகௌவ. இந்த வழியில் பயணிப்பவர்கள் இந்த அரச மாளிகையின் வாயிலை கடந்து தான் பயணிக்கிறார்கள் ஆனால் இந்த இடத்தை எத்தனை பேர் அறிந்திருக்கிறார்கள் அல்லது சென்று பார்வையிட்டிருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியே.
இலங்கையின் பாரம்பரிய கலை கலாச்சாரங்களை பிரதிபளிக்கும் வகையில் மன்னர்கள் வாழ்ந்த, அவர்கள் பயன்படுத்திய பொருட்களை நூதனசாலைக்கு சென்று பார்த்து பழகிப்போனவர்களுக்கு மன்னர்கள் வாழ்ந்த அரண்மனையிலேயே சென்று பார்ப்பது புதியதோர் அனுபவத்தை தருவதாக அமையும்.
கொளன்ன நகரம் எம்பிலிப்பிட்டிய மற்றும் சூரியவெவக்கு இடையில் அமைந்துள்ளது மடுவன் அரண்மனைக்கான வாயில். அந்த வாயில் வழியே கொஞ்ச தூரம் நடந்து சென்றால் இப் பிரதேசம் தாழ்நில ஈரவலயத்தில் என்பதையே மறந்து போகும் அளவுக்கு மலை நாட்டிச் சாயலில் எங்கு பார்தாலும் கிளைகளைப் பரப்பி அன்னார்ந்து பார்க்கும் அளவுக்கு உயரமான மரங்கள், மரத்திற்கு மரம் தாவிக்குதிக்கும் குரங்குகள், பச்சை விரிப்பாய் புல் வெளிகள் என இயற்கை கொடையில் பல ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது மடுவன்வெல அரண்மனை.
இலங்கை ஆங்கிலேயரின் காலனித்துவத்தின் கீழ் இருந்த காலத்தில் போர்த்துக்கீச தளபதியின் தலையை கொய்து கொடுத்தமையால் கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னனான இரண்டாம் இராஜசிங்க மன்னன் மடுவன்வெல திசாவைக்கு பரிசாகக்கொடுக்கப்பட்ட இடம் தான் இது. மொத்தமாக 54 000 ஏக்கர்கள் பரிசளிக்கப்பட்டதுடன் 1700 ஆம் ஆண்டு 24 000 ஏக்கர் நிலப்பரப்பில் மடுவன்வெல மாளிகை அமைக்கப்பட்டுள்ளது. மடுவன் வெல திசாவையின் வீர செயலால் வரலாற்றில் அவர் சேர் ஜோன் வில்லியம் என அழைக்கப்பட்டார்.
பிரதான நூழைவாயில்
கற்களினால் அமைந்துள்ள பிரம்மான்டமான இந்த வாயில் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்கவைப்பதுடன். வாயிலை பார்த்ததும் உள் சென்று இங்கு என்னதான் இருக்கிறது என பார்க்க தோனும் அளவுவுக்கு கலைவேலைப்பாடுகளுடனானது.
இந் மாளிகையில் ஆரம்பகாலத்தில் 121 அறைகளும் 21 வாசல்களும் இருந்ததுடன் தற்போது 40 அறைகளும் ஏழு வாசல்களும் மட்டுமே எஞ்சியுள்ளது. தற்போது இம் மாளிகை தென்பொருளியல், கலாச்சார பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது.
ஆரம்பத்தில் மூன்று பெரும் சுவர்களால் பிரிக்கப்பட்ட மூன்று பெரிய பூங்காக்கல் இவ் அரண்னையை சூழ இருந்ததாகவும் அவற்றில் நீர் கொட்டும் வகையில் அகழிகள் ரமக்கப்பட்டுள்ளன ஆனால் இன்று இவை முற்றாக சேதமடைந்துள்ளது.
பிரம்மிக்கத்தக்க தரைவேலைப்பாடுகள்
நெதர்லாந்தில் இருந்துக்கொண்டுவரப்பட்ட பீங்கான் ஓடுகளினால் ஆன இத்தரை அலங்காலம் இன்று போய் பார்த்தாலும் புத்தம் புதிதாய் காட்சியளிக்கின்றது. இத்தனை கலை நயம் மிக்க பிரம்மிக்கத்தக்கவேலைப்பாடுகள் கொண்ட தரை 1905 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது.
குயின் விக்டோரியாவின் படம் பொரிக்கப்பட்ட சலவைக்கற்கள் அவற்றுக்கு நடுவே ஸ்ரேலிங் பவுனக்கான அடையாள சின்னங்கள் என வித்தியாசமாக கலை படைப்பு என்றுதான் சொல்லவேண்டும்.
இப்படியான தரை அழங்காரம் அமைய காரணம். ஆங்கிலேயரின் முகங்கள் சின்னகள் எம் நாட்டவரின் காலில் மிதபட வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு மடுவன்வெல திசாவையால் செய்யப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாது குட் லக் 1095 என்ற வாச
கமும், செருப்பு புகைப்படங்களும் சலவைக்கற்களில் பதிக்கப்பட்டுள்ளது. இத்தரை அழங்காரத்தை மேலும் அழகுபடுத்த இரத்தினகற்கள், பொற்காசுகள் பயன்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் மாளிகையின் அழங்கார தரை வெளிநாட்டவர், உள்நாட்டு கீழைத்தேய கலைகளை அடிப்படையாக கொண்டமைந்தது
பாரம்பரியத்தை பரை சாற்றும் படிகள் மட்டும் தளாபடங்கள்
மா,தோக்கை,புளியம், தளாபாடங்கள் செய்யத்தக்க பலபலப்பான மரப்பலகைளில் செய்யப்பட்டுள்ள இங்குள்ள படிக்கட்டுகள், தளாபாடங்களை இன்று போனாலும் பார்வையிடத்தக்கவகையில் உள்ளது அவற்றில் சிங்களவர்களின் பாரம்பரியங்களை எடுத்துக்காட்டும் சிற்பங்கள் தத்துரூபமாக வடிக்கப்பட்டுள்ளன. மடுவன்வெல திசாவையின் ஆசனம் இன்றுவரை தொன்பொருளியளாளர்களால் பேனிபாதுகாக்கப்பட்டு வருகின்றமை சிறப்பம்சமாகும்.
இயற்கையை வீட்டிற்கே இருந்தே இரசிக்கும் வண்ணம் வடிவமைக்ப்பட்டுள்ளது இம்மாளிகை. இங்குள்ள படிக்கட்டுக்களில் இருந்து கீழ் இறங்கிவரும் போது குனிந்து செல்லக் கூடிய வண்ணமே அமைந்துள்ளது. காரணம் ஆங்கிலேயர் பிறவியிலேயே சற்று உயரமானவர்கள் அவர்கள் தங்களை தலைகுனிந்து வணங்கி செல்வதை போல அமையவேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறு அமைந்துள்ளதாம்.
பிறக்கமுன் தந்தையை இழந்த மெலமு பிறந்ததுமே தாயையும் இழக்க (மடுவன்வெல திசாவ) மடுவன்வெல குடும்பத்தினரால் தத்தொடுக்கப்பட்டவர். விக்கிரமசிங்க விஜயசுந்தர ஏக்கநாயக்க அபயகோன் முதியன்சேன ராலாமிகே சேர் ஜோன் வில்லியம் என்ற மிகபெரிய பேருக்கு சொந்தக்காரர் ஆனால். கலவென்ன குமாரியாமி என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்ததோடு ஆறு தலைமுறையினரை இம்மாளிகை கண்டுள்ளது. 1974 ஆம் ஆண்டு தொன்பொருள் நிலையமாக மாறியுள்ளது.
Comments
Post a Comment