எல்லாளனின் கல்லறை எங்கே ?



இலங்கையை 44 ஆண்டுகள் மிக நீண்ட காலமாக ஆட்சி செய்த மன்னன் எல்லாளன்.  நீதி தவறாமல் ஆட்சி செய்த  மறவன். கி.மு 205 இல் இருந்து கி.மு 161 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த  இவன் தனது அமைச்சரவையில் சிங்கள பிரதானிகளுக்கு கூட சம உரிமை வழங்கினான் என்கின்றது வரலாறு.
இத்தனை பெருமைகளைக்கொண்ட தமிழ் மன்னனின் கல்லறை அடையாளம் இழந்து, இல்லை மறைக்கப்பட்டு தமிழர்களுக்கு சொந்தமில்லது போய்விட்டது என்பது வரலாற்று வேதனை.

அனுராதபுரத்தில் இருந்து தெற்கே 11 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது தக்கன விகாரை. இதன் அண்மையில் துட்டகைமுனுவின் கல்லறை அமைந்துள்ளதாக வரலாறுகள், நூல்கள் சான்று கூறுகின்றன.
 ஆனால், இது உண்மை இல்லை. தமிழ் மன்னன் எல்லாளனின் கல்லறை இது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.



கி.மு 2 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் 74 வயதான எல்லாளனுக்கும் 16 வயதே ஆன துட்டகைமுனுக்கும் அனுராதபுரம் தக்கன விகாரைக்கு அண்மையில் போர் நடக்கிறது. போரில் துரோகத்தனமாக எல்லாலளன் கொல்லப்படுகிறான்.

எல்லாளனை வென்ற துட்டகைமுனு அவனை கௌரவிப்பதற்காக அதே இடத்தில் எல்லாளனுடைய உடலைப் புதைத்து அங்கேயே ஒரு நினைவுத்தூபியையும் கட்டுவித்து, கல்வெட்டு ஒன்றையும் செதுக்கினான்.

1900ஆம் ஆண்டு காலப்பகுதி வரை எல்லாள மன்னனுடைய நினைவுத்தூபியானது மக்களால் மரியாதை ஙெ்லுத்தப்பட்டு வந்தது என பல வரலாற்றாதாரங்கள் சென்று பகர்கின்றன. எல்லாள மன்னனுடைய நினைவுத்தூபியானது அவன் இறந்த இடத்தில் கட்டப்பட்டு கி.பி 6ஆம் நூற்றாண்டு வரைக்கும் மக்களால் மரியாதை ஙெ்லுத்தப்பட்டு வருவதாகவும் அதனை கண் கூடாக கண்டதாகவும் மகாவம்சத்தின் எழுத்தாளர் மகாநாம தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி 14ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சத்தர்மலங்காரய என்னும் நூலில் எல்லாளன் புதைக்கப்பட்ட இடத்தில் எல்லாளனின் பெயருடன் விளங்கிய நினைவுத்தூபி ஒன்றினை துட்டகைமுனு கட்டுவித்தான் என திட்டவட்டமாக கூறுகின்றது. 1818 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிளர்ச்சியின்போது கண்டி இராச்சியத்தின் பிரதானி, பிலிமத்தலாவைக்கு தப்பி ஓடிக்கொண்டிருக்கையில் எல்லாளனின் நினைவுத்தூபியை கடக்கும் போதுதனது சிவிகையில் இருந்து கீழ் இறங்கி மரியாதை ஙெ்லுத்தினான் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.

இத்தனை வரலாற்று சான்றுகளும், வரலாற்று ஆசிரியர்கள் கூறிய கருத்துக்களும் பொய் என நிரூபிக்கப்பட்டது என கூறினால் நம்பமுடிகின்றதா?

நம்பித்தான் ஆகவேண்டும் என்ற நிலையில் இருக்கிறார்கள் தமிழர்கள். மண்மேடாக இருந்த எல்லாளனுடைய தூபி, கல்வெட்டு என்பனவற்றை மறைக்க முயன்றதோடு அவை துட்டகைமுனுவினுடைய நினைவுத்தூபி என மாற்றவும் முனைந்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் ஆய்வாளர் பரணவிதாரன.
முன்னாள் தொல்பொருள் ஆராய்ச்சியாளரான பெல் என்பவரின் கருத்துக்களை மேற்கோள் காட்டி எல்லாளனுடைய தூபியை துட்டகைமுனுவினுடைய நினைவுத்தூபி என1946ஆம் ஆண்டு பரணவிதாரன தனது ஆண்டறிக்கையில் தெரிவித்ததையடுத்து எல்லாளனின் கல்லறையில் துட்டகைமுனுவின் கல்லறை என்ற விளம்பரப்பலகை இடப்பட்டுள்ளது.

மகாவம்சத்தின் கருத்துப்படி சமயச் சடங்குகள் நிகழ்த்தப்படும் பிரதேசம் மாலக்க என்று அக்காலத்தில் அழைக்கப்படும். எனவே துட்டகைமுனு தனது இறுதி ஆங்யைில் மகாவிகாரை வளவிற்குள் தனது உடலை தகனம் செய்யுமாறு கேட்டுக்கொண்டான் எனவும் துட்டகைமுனுவின் உடல் இங்கு தகனம்செய்யப்பட்டதால் இப்புனித பிரதேசம் நிசிம மாலக்க ஆக மாறியது என மகாவம்சம் கூறுகின்றது.
மகாவம்சத்தை மொழிபெயர்த்த கைகர் நிசிம மாலக்க என்ற பதத்தை அரசனின் சடலம் மகா விகாரைக்கு வெளியே உள்ள மாலக்கவில் தகனம் செய்யப்பட்டுள்ளது என்று மொழிபெயர்த்தார். இதற்குரிய சரியான மொழிபெயர்ப்பை அபய ஆரியசிங்க என்பவர் பிற்காலத்தில் வெளியிட்டார். சரியான மொழிபெயர்ப்பின்படி நிசிம மாலக்க என்பது வழக்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சடங்குகளுக்கு பொருத்தமில்லாத இடம் ஆகும். ஆகவே, பரணவிதாரனவின் தவறான மொழிபெயர்ப்பால் எல்லாளனின் சமாதியை துட்டகைமுனுவினுடையது என்றும் பிழையான முடிவை எடுத்துரைத்துவிட்டார்.

அத்தோடு நின்றுவிடாது துட்டகைமுனுவின் பெறாமகனான வலகம்பா மன்னனே தக்கன தூபியை கட்டினான். இது துட்டகைமுனுவின் சமாதியின் மீது கட்டப்பட்டது என்ற ஒரு கற்பனையை வெளியிட்டார். இதற்கு எந்தவிதமான வரலாற்று சான்றுகளும் இல்லை. தக்கன தூபியானது எல்லாளனின் கல்லறைக்கு அண்மையில் கட்டப்பட்டது என்று மகாவம்சம் கூறுகின்றது. ஆனால், அது துட்டகைமுனுவின் நினைவுத்தூபி என எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
மகாவம்ங்த்தின் காவிய நாயகனான துட்டகைமுனுவின் ங்மாதியாக தக்கன தூபி இருந்திருந்தால் கட்டாயம் இது தொடர்பில் மகாவம்ங்த்தில் குறிப்பிடப்பட்டிருந்திருக்கும் என்பது சீட்டிக்காட்டத்தக்கது.

தமிழ் வீர தர்மத்தோடு நாட்டை ஆண்ட மன்னனுடைய நினைவுத்தூபி இரண்டு தசாப்தங்களைத் தாண்டி மரியாதை செலுத்தப்பட்டு வந்த மரபு
ஒருவரின் மொழிமாற்று பிழையினால் தமிழர் கையில் இருந்து பறிபோனது என்பது வருந்தத்தக்கவிடயமாகும்.
இன்றுள்ள சந்ததியினருக்கும் சரி எதிர்கால சந்ததியினருக்கும் சரி இணைய தளத்தில் கூட தேடி பெற்றுக்கொள்ள முடியாத தகவலாக உள்ளது எல்லாள மன்னனின் கல்லறை.

Comments