கட்டிடங்கள் இரண்டு வாசல் ஒன்று - திருகோணமலை கோட்டை

(Fort Fredrick)



திருக்கோணமலை என்றதும் நினைவுக்கு வருவது திருக்கோணேஸ்வரம்   தான். இன மத பேதமின்றி  அனைவரும் ஙெ்ன்று வழிபடும் தலம்.  வருடம் முழுவதும்  வெளிநாட்டவரின் வருகை உள்ள சீற்றுலாத் தலங்களுள் இதுவும் ஒன்று.
திருக்கோணேஸ்வரம்   ஆலயத்திற்கு ஙெ்ல்லும் முன் ஆலயத்தின் வாயில் ஆதிகால நுழைவாயில் ஒன்று உள்ளது. ஆனால், எது என்ன? என்பது பலர் அறியாதது. இந்த இடத்தில் நுழைவாயிலைத்தவிர வேறு எந்தக்  கட்டிடங்களும் இருந்ததற்கான தடயங்கள்  இல்லை.
திருகோணமலை  கோட்டைக்கான நுழைவாயில்தான் இது .

திருகோணமலை நகரில் இருந்து 6.6 கிலோமீற்றர் தொலைவில் டவத் சதர பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது திருகோணமலை கோட்டை. நகரத்தில் உயரமான இடத்திலிருக்கும் சாமி மலையை அண்மித்து இந்தக் கோட்டை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
 இவ்விடத்தில் இருந்த ஜைன நிகன்ட எனும் மத ஆச்சிரமம் உடைக்கப்பட்டு மகாசேனன் மன்னனால் கி.பி. 275 - 724 ஆண்டுக்காலப்  பகுதியில் விகாரைக்கு போதனை மண்டபம் ஒன்று இவ்விடத்தில் அமைக்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன.

அதற்கு பிற்பட்ட காலத்தில் கி.பி. 1624 இல் போத்துக்கீங் தளபதியான கொன்ஸ்டன்தினோ த ஷா என்பவரால் இவ்விடத்தில் இருந்த எல்லாக் கட்டிடங்களும் இடித்து தரை மட்டமாக்கப்பட்டு பிரட்ரிக் கோட்டை எனப்படும் திருகோணமலை கோட்டை 1623  ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

பின்னர் ஒல்லாந்தர் இந்தக் கோட்டையைக் கைப்பற்றினர். இதன் பின்னர் இக் கோட்டையை விரிவுபடுத்தி  உபயோகித்தனர். ஆங்கிலேயர்கள் இலங்கையை கைப்பற்றிய பின்  இக்கோட்டையும் ஆங்கிலேயர் வங்மானது. அதற்கு பிறகு இக்  கோட்டையை மேலும்,  இவர்கள் விரிவுபடுத்தி பேதிரி கோட்டை என்ற பெயரும் சுட்டி உபயோகித்து வந்துள்ளனர். தற்போது திருக்கோணமலை கோட்டை இலங்கை இராணுவத்தின் பலமான முகாமாக விளங்குகின்றது.
இக்கோட்டை இலங்கையை ஆண்ட அந்நிய தேங்த்தவர்களால் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டமைக்கு   காரணம், கோட்டைக்கு அண்மையில் அமையப் பெற்ற இயற்கைத் துறைமுகம் தான்.

இந்தக் கோட்டையை அண்மித்து இடைக்கிடை செய்த அகழ்தலின்போது புராண பௌத்த இந்து சிலைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.  தமிழர்களின் புகழ் பூத்த திருக்கோணேஸ்வரம்  ஆலயமும் இக்கோட்டைக்கு உள்ளேயே அமைந்துள்ளதுடன் கோட்டைக்கும் ஆலயத்துக்கும் ஒரு நுழைவாயில் என்பது இங்குள்ள தனிச்சிறப்பாகும் .

கோட்டை வாசலில் உள்ள தமிழில் கல்வெட்டு
ஆலயம் இடிக்கப்பட்டு கோட்டை அமைக்கப்பட்ட விடயம் தொடர்பில்16 ஆம் நூற்றாண்டிற்கு உரித்தான தமிழ் கல்வெட்டொன்று கோட்டைக்கு பிரவேசிக்கும் கதவை அண்மித்த மதிலில் உள்ளது.  இங்கிருந்த இந்து தேவாலயம்  போர்த்துகேயர்களினால் அழிக்கப்பட்டதென அதில் கூறப்பிடப்பட்டுள்ளது.

 அதேபோல் இக்கல்வெட்டானது பிற்காலத்திலே நடக்க இருக்கின்ற நிகழ்வுகளை முன்கூட்டியே தெரிவித்த தீர்க்க தரிசனப் பாடலாக வரிகளும் எழுத்துக்களாக பொறிக்கப்பட்டுள்ளது.
இக் கல்வெட்டினது மொழி பெயர்ப்புக்கள் பல காணப்பட்ட போதிலும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொழிப்பெயர்பு ஒன்றும் உள்ளது.

முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியை பின்னே பறங்கி பிரிக்கவே - மன்னாகேள் பூனைக் கண், செங்கண் புகைக் கண்ணன் போனபின் மானே வடுகாய்விடும் இப்பாடலின் கருத்தினை யாராலும் இவ்வளவு எளிதாகப் புரிந்துகொள்ளமுடியாது. முற்காலத்திலே குளக்கோட்டன் என்பவர் திருப்பணி செய்த இந்த ஆலயத்தை, பிற்காலத்தில் பறங்கி இனத்தவர் அழிப்பர் என்றும் அதன்பின் ஆட்சியில் ஏற்பட இருந்த மாற்றங்கள் பற்றியும் இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது என்பது பலரின் நம்பிக்கை.
1945 இல் விஷ்ணு, லக்ஷ்மியின் இரு சிலைகள் கண்டெடுக்கப்பட்டதுடன் கி.பி. 1223 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சேர்மதியான சமஸ்கிருத கல்வெட்டும் கண்டு பிடித்துள்ளது. சோடகங்கதேவ என்பவர் வந்திறங்கியதைப் பற்றி அதில் குறிப்பிடுகின்றது.

இதை அண்மித்து அதிகளவான பௌத்த சிலைகளும் கோகன்ன விகாரையும் சிதைவுகளும் திருகோணமலைக் கோட்டைக்குள்   இன்றும் காணக்கிடைக்கின்றது.

Comments